அபுதாபி ரேஸிங் களத்தில் அஜித் - அனிருத் சந்திப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங்கிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் நடிகர் அஜித் குமாரை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங்கிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீப காலமாக சர்வதேச அளவிலான பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் நடந்த இந்த சந்திப்பு, அஜித்–அனிருத் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இருவரும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைவார்களா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.






