"ஏ.கே-64" படத்தின் கதை தயாராகி வருவதாக அஜித்குமார் அறிவிப்பு

அஜித்தின் 64-வது படத்தின் மீது அனைவரது பார்வையும் திரும்பி இருக்கிறது.
நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், "அஜித்குமார் ரேஸிங்" என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. நேற்று ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி 3வது பிடித்து அசத்தியது.
இந்த நிலையில், ''குட் பேட் அக்லி'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் 64-வது படத்தின் மீது அனைவரது பார்வையும் திரும்பி இருக்கிறது. இது குறித்து அஜித்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, ஏ.கே.64 படத்திற்கான கதை தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றார். மேலும் அடுத்த கார் பந்தயத்தில் இந்திய சினிமாவை புரொமோட் செய்ய உள்ளதாகவும், அதற்காக தனது காரில் இந்திய சினிமாவின் லோகோவை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .






