தனது 2-வது படத்திலேயே இயக்குனராக மாறிய நடிகை

இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் 2-வது படத்தில் இயக்குநராக மாறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எஸ்2எஸ் சினிமாஸ் தயாரிக்கும் 2-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
இதில், 'பிரபுத்வா ஜூனியர் கலாசாலா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஷக்னா ஸ்ரீ வேணுன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தை அவரே இயக்குகிறார்.
வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டரில் கருப்பு நிற உடை அணிந்த ஒரு இளம் ஜோடி கையில் ரோஜா பூவை ஏந்தியபடி இருப்பதும், மற்றொரு இளைஞன் அந்த பெண்ணின் கையைப் பிடித்திருப்பதும் காட்டப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப் படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story






