'வா வாத்தியார்' பட விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்


An appeal has been filed in the Supreme Court against the ban order on the film Vaa Vaathiyar
x

இப்படம் கடந்த 5ம் தேதி வெளியாக இருந்து

சென்னை,

'வா வாத்தியார்' திரைப்படம் மீதான தடை உத்தரவுக்கு எதிராக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடனை திரும்ப செலுத்தும் வரை 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நாடியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் .இப்படம் கடந்த 5ம் தேதி வெளியாக இருந்து குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story