சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு


announcement of First look of Santhanams DD Next Level
x

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். கடைசியாக இவரது நடிப்பில் 'இங்க நான் தான் கிங்கு' எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story