பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு இன்னொரு பம்பர் ஆபர்...?


Another bumper offer for Rashmika in Bollywood...?
x

பாலிவுட்டில் ''தமா'' படத்தில் நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு தற்போது இன்னொரு பம்பர் ஆபர் வந்துள்ளதாக தெரிகிறது.

சென்னை,

நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே பாலிவுட்டில் ''தமா'' படத்தில் நடித்து வரும் வருக்கு தற்போது இன்னொரு பம்பர் ஆபர் வந்துள்ளதாக தெரிகிறது.

'கிரிஷ் 4' படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக ராஷ்மிகா நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் முந்தைய பாகங்களில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தநிலையில், இதிலும் அவரே நடிப்பார் என்று எதிபார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவருக்கு பதிலாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், படக்குழு இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 'கிரிஷ் 4' படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவரே அப்படத்தை இயக்கவும் உள்ளார். ராஷ்மிகா மந்தனா இதுவரை அவருடன் நடித்ததில்லை. இதன் மூலம், இந்த புதிய ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

'புஷ்பா,' 'புஷ்பா 2', 'அனிமல்', 'சாவா' ஆகிய படங்களின் மூலம் ராஷ்மிகா மந்தனா ஒரு நட்சத்திர கதாநாயகியாக மாறியுள்ளார். சல்மான் கானுடன் இவர் நடித்த ''சிக்கந்தர்'' தோல்வியடைந்தாலும், இவரின் மதிப்பு குறையவில்லை.

1 More update

Next Story