நடிகை ரம்யா குறித்து அவதூறு கருத்து- மேலும் ஒருவர் கைது

நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் நடிகை ரம்யாவை இன்ஸ்டாகிராமில் சிலர் அவதூறாகவும், தகாத வார்த்தையிலும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசில் ரம்யா குறித்து ஆபாச கருத்து வெளியிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரதுர்கா, கோலாரை, கங்காதர் மற்றும் ஓபண்ணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நடிகை ரம்யா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






