'கத்தனார்’ - கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் பர்ஸ்ட் லுக்


Anushka Shetty’s endearing look from Kathanar revealed
x

அனுஷ்கா, இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

சென்னை,

'கத்தனார்: தி வைல்ட் சோர்சரர்' படத்தின் தயாரிப்பாளர்கள், அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அனுஷ்கா, இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்தப் படம் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து கத்தனாரின் வாழ்க்கையை பற்றியது. அவர் மந்திர சக்திகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஜெயசூர்யா , பிரபு தேவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘ஹோம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரோஜின் தாமஸ் இயக்கும் படம் ‘கத்தனார்’. படத்தை கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இப்படம் 15 மொழிகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story