'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணே கனவே' என்ற பாடலை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
Published on

சென்னை,

நடிகர் அதர்வா, "பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்" போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது 'ஒத்தைக்கு ஒத்த' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா 'டிஎன்ஏ' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது.

இந்தநிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இருந்து 'கண்ணே கனவே' எனும் பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்த பாடலை இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட உள்ளார். இது குறித்து ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com