அர்ஜுன் தாஸின் "பாம்" டைட்டில் டீசர் வெளியீடு


தினத்தந்தி 27 Jun 2025 5:57 PM IST (Updated: 27 Jun 2025 6:39 PM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் தாஸின்"பாம்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் 'பாம்' என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

இந்நிலையில், 'பாம்' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது,

1 More update

Next Story