பாலையாவின் "அகண்டா 2" டீசர் வெளியீடு


தினத்தந்தி 9 Jun 2025 6:13 PM IST (Updated: 9 Jun 2025 6:15 PM IST)
t-max-icont-min-icon

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்து வரும் 'அகண்டா 2' படம் செப்டம்பர் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.

இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'அகண்டா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story