மம்முட்டி- மோகன்லாலை இயக்கும் 'குருவாயூர் அம்பல நடையில்' பட நடிகர்?


Basil Josephs plan to team up with Mammootty and Mohanlal
x

கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கியவர் பசில் ஜோசப்.

திருவனந்தபுரம்,

மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அதன்படி, 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே', 'குருவாயூர் அம்பல நடையில்' படங்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பசில் ஜோசப் கூறுகையில், "சிறிது காலம் நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் படம் இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகின்றன.

படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், என் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்பதால், உடனடியாக ஆரம்பிக்க முடியவில்லை. மம்முட்டி- மோகன்லாலை இயக்குவது பற்றி கேட்கிறார்கள். அது சரியான நேரத்தில் நடக்கும்" என்றார்.


1 More update

Next Story