’பைசன்’: தெலுங்கிலும் பாராட்டுகளைப் பெறும் துருவ் விக்ரம்

சமீபத்தில் இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
சென்னை,
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
அங்கும் படிப்படியாக வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பைசன் வரும் நாட்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






