'குபேரா' பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்


Bollywood actor Jim Sarbh drops interesting details about Kubera
x

சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தின் மூலம் ஜிம் சர்ப் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப், தற்போது தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'குபேரா' படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தின் மூலம் ஜிம் சர்ப் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

சமீபத்திய நேர்காணலில், 'குபேரா' மற்றும் படத்தில் அவரது பாத்திரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை ஜிம் பகிர்ந்தார்.

அதன்படி, படத்தில் அவர் ஒரு பணக்காரராக நடித்துள்ளதாகவும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக அவர் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்ததாகவும் கூறினார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story