'சினிமாவில் திறமையை விட அது முக்கியம்'...- நடிகை டயானா

டயானா தற்போது 'டூ யூ வான்ன பார்ட்னர்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
சென்னை,
இந்த ஆண்டு வெளியான ''சாவா'' மற்றும் ''ஆசாத்'' படங்களால் ரசிகர்களை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி சில சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். திரைப்படத் துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் பேசினார்.
திரைப்படத்துறையில் திறமையாக இருக்கும் நடிகையை விட அழகாக இருக்கும் நடிகைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். தனக்கு 30 வயதுதான் ஆனாலும் பல குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ''நடிகைகள் தங்கள் அழகுக்காக பாராட்டப்படுவது நல்லதுதான். ஆனால் அது போதாது. ஒரு நடிகையாக, உங்கள் அழகுக்காக மட்டுமல்லாமல், திறமைகள் மற்றும் நடிப்புக்காகவும் பாராட்டப்பட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்'' என்றார்.
டயானா தற்போது 'டூ யூ வான்ன பார்ட்னர்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இவருடன், தமன்னா ஜாவேத் ஜாப்ரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி மற்றும் நீரஜ் கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கோலின் டி'குன்ஹா மற்றும் அர்ச்சித் குமார் இயக்கியுள்ளனர். ''டூ யூ வான்ன பார்ட்னர்'' தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.






