பொங்கல் பண்டிகை கொண்டாடிய சினிமா பிரபலங்கள்...!

தைப்பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது
சென்னை
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலையே மக்கள் புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து தைப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினி காந்த், ராம் சரண், சிவகார்த்திகேயன், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், அண்டிரியா, அருண் விஜய், சேரன் உள்பட சினிமா நட்சத்திரங்கள் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.







Related Tags :
Next Story






