புதுச்சேரியில் சினிமா காட்சிகள் ரத்து


புதுச்சேரியில் சினிமா காட்சிகள் ரத்து
x
தினத்தந்தி 30 Nov 2024 4:57 PM IST (Updated: 30 Nov 2024 4:59 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில், பெஞ்சல் புயல் காரணமாக காலை முதலே மழை பெய்து வரும் நிலையில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புதுச்சேரி,

வங்கக்கடலில் நேற்று உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று புதுச்சேரியில் மாலை மற்றும் இரவு காட்சிகளை ரத்து செய்து கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.


Next Story