''கூலி'' நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த், அமீர்கான், லோகேஷ் வாங்கியது எவ்வளவு?


Coolie cast fee: What Rajinikanth, Aamir Khan and Lokesh Kanagaraj earned
x

கூலி படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு (நாளை) ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் திரைக்கு வருவதால் அனைவரின் பார்வையும் அதன் மீது உள்ளது. படத்தின் முன்பதிவு புதிய சாதனையை படைத்திருக்கும்நிலையில், கூலி படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ரஜினிகாந்த் 'கூலி' படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அமீர் கான் ரூ.20 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி இருந்தாலும், ரஜினிகாந்த் மீதான மிகுந்த அன்பு மற்றும் மரியாதை காரணமாக தனது கதாபாத்திரத்திற்காக அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

'கூலி' படத்தில் சைமனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா ரூ.10 கோடியும், ஸ்ருதிஹாசன் ரூ.4 கோடியும் பெற்றதாக தெரிகிறது.

அதேபோல், நடிகர் சத்யராஜ் ரூ.5 கோடியும் கன்னட நட்சத்திரம் உபேந்திரா ரூ.5 கோடியும் பெற்றதாக கூறப்படுகிறது. 'கூலி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடியும் இசையமைத்த அனிருத் ரூ.15 கோடியும் சம்பளம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

1 More update

Next Story