இணையதளத்தில் வெளியானது 'கூலி' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி


இணையதளத்தில் வெளியானது கூலி திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
x

கோப்புப்படம் 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

'கூலி' திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 'கூலி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே 'கூலி' திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான பதிப்புடன் முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story