அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிப்பு


Date announcement for the next Oscars ceremony
x
தினத்தந்தி 22 April 2025 9:09 AM IST (Updated: 24 April 2025 8:59 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது.

சென்னை,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.

விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள 100-வது ஆஸ்கர் விழா முதல் இந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story