நிவின்பாலி பிறந்தநாளையொட்டி “டியர் ஸ்டூடெண்ட்ஸ்” படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

‘டியர் ஸ்டூடெண்ட்ஸ்’ படத்தில் நிவின் பாலி , நயன்தாரா நடித்துவருகின்றனர்.
நிவின்பாலி பிறந்தநாளையொட்டி “டியர் ஸ்டூடெண்ட்ஸ்” படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
Published on

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'லவ் ஆக்சன் ட்ராமா'. இந்தப் படத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளனர். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். நிவின் பாலி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. முன்பு 'பிரேமம்' கல்லூரி காதல் கதையை அடிப்படையாக கொண்டு நிவின் பாலி - சாய் பல்லவி நடிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது. டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் நிவின் பாலி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டியர் ஸ்டூடெண்ட்ஸ் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com