''ஸ்பிரிட் '' படத்தை தொடர்ந்து....''கல்கி 2''வில் இருந்தும் தீபிகா படுகோனே நீக்கமா? - படக்குழு தகவல்


Deepika Padukone did not exit Kalki 2898 AD 2
x
தினத்தந்தி 10 Jun 2025 11:03 PM IST (Updated: 10 Jun 2025 11:03 PM IST)
t-max-icont-min-icon

''கல்கி 2'' படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

சென்னை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனால் சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதன்படி, ''சந்தீப் ரெட்டி வங்கா'' இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் ''ஸ்பிரிட்'' படத்தில் நடிக்க தீபிகா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார்.

இதனைத்தொடர்ந்து, ''கல்கி 2'' படத்தில் இருந்தும் தீபிகா படுகோனே நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், 'கல்கி-2' படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இப்போதுதான் தொடங்கி உள்ளன. தீபிகாவை படத்தில் இருந்து நீக்குவது பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை என கூறினர்.

1 More update

Next Story