'29' படத்தின் கதை பிடித்திருந்தும் "நோ" சொன்ன தனுஷ்- காரணம் என்ன?- கார்த்திக் சுப்பராஜ்


29 படத்தின் கதை பிடித்திருந்தும் நோ சொன்ன தனுஷ்- காரணம் என்ன?- கார்த்திக் சுப்பராஜ்
x
தினத்தந்தி 11 Dec 2025 10:39 AM IST (Updated: 11 Dec 2025 12:04 PM IST)
t-max-icont-min-icon

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனம் 29 படத்தை தயாரிக்கிறது.

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.

இவர் தற்போது , இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், " `29' எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம். `மேயாத மான்' தான் ஸ்டோன் பென்ச்-ன் முதல் படம். நிறைய படங்கள் செய்திருந்தாலும், முதல் அனுபவமாக `மேயாத மான்' மறக்க முடியாதது. ரத்னாவும் எங்களுக்கு முக்கியமான நபர். வெளியில் சில நேரம் அவர் பேசுவது பிடிக்காது, ஆனால் நம்ம வீட்டு பையன் தப்பு செய்தால் கூப்பிட்டு கண்டிப்பதை போல, `இதில் கவனமாக இருங்கள்' என சொல்வேன். இந்தக் கதையை அவர் பல வருடம் முன்பே என்னிடம் கூறினார். நாங்கள் ராத்னவை தனுஷ் சாரிடம் அழைத்து சென்று கதை சொல்ல வைத்தோம். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ஆக்ஷன் படங்கள் தொடர்ச்சியாக செய்யும் போது இதை நடித்தால் சரியாக இருக்காது என கூறி இளம் நடிகர் யாரையாவது நடிக்க வையுங்கள்" என்று தனுஷ் கூறியதாக தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story