12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் தனுஷ் படம்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் புதிய டிஜிட்டல் பதிப்பாக ‘அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்னை,
இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த 'ராஞ்சனா' என்ற திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்து, ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் கவனம் ஈர்த்தன.
இதற்கிடையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 'அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக தனுசின் பிறந்தநாளையொட்டி (ஜூலை 28), அப்ஸ்விவிங் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை ஆகஸ்டு 1-ந்தேதி வெளியிடுகிறது.
Related Tags :
Next Story






