'தூம் 4' - வில்லனாக இந்த தென்னிந்திய நடிகரா?


Dhoom 4: Ranbir locked, south star to play the villain
x

ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்திலும் , சூர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

சென்னை,

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஹிரித்திக் ரோஷன், ரிமி சென், உதய் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'தூம்'. இதன் வெற்றியைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி கவனம் பெற்றன.

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு தூம் 3 வெளியானது. இதில், அபிஷேக் பச்சன், அமீர்கான், உதய் சோப்ரா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இதன் 4-வது பாகத்தை உருவாக்க படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

அதன்படி, முந்தைய பாகங்களில் நடித்த அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா இப்பாகத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படும்நிலையில், ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்திலும் , சூர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆரிடம் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்திவருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனம் தாயாரித்து வரும் 'வார் 2' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story