"வீர தீர சூரன் " படக்குழுவை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் நேற்று வெளியானது.
சென்னை,
சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நேற்று வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்தநிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'வீர தீர சூரன்' படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் நான் எழுவது நடந்தே தீரும். விக்ரம் சார் திரையரங்கில் வெறித்தனம் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த ஒரு சம்பவம். 'வீர தீர சூரன்' திரைக்கதை சிறப்பாக எழுதி, அட்டகாசமான ஆக்சன் திரில்லராக, அழகான நடிப்புடன் படமாக்கப்பட்டு உள்ளது. பல மாஸ் காட்சிகள் நிறைந்துள்ளது. இயக்குநர் அருண் குமார், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை துஷாரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.






