டிரைவரை கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு... ''பணம் பறிக்கும் முயற்சி'' - இயக்குனர் மணீஷ் குப்தா மறுப்பு


Director Manish Gupta denies allegations of stabbing driver: This is an extortion racket
x
தினத்தந்தி 10 Jun 2025 4:16 AM IST (Updated: 10 Jun 2025 5:12 AM IST)
t-max-icont-min-icon

தனது டிரைவரை கத்தியால் குத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் இயக்குனர் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை,

திரைப்படத் இயக்குனரும் எழுத்தாளருமான மணீஷ் குப்தா மீது கடந்த 6-ம் தேதி வெர்சோவா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சர்க்கார் மற்றும் செக்சன் 375 போன்ற படங்களை எழுதியதற்காகவும், ரஹஸ்யா, தி ஸ்டோன்மேன் மர்டர்ஸ், 420 ஐபிசி மற்றும் ஒன் பிரைடே நைட் ஆகியவற்றை இயக்கியதற்காகவும் அறியப்படுபவர் மணீஷ் குப்தா.

தனது டிரைவர் முகமது லஷ்கரை கத்தியால் குத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வெர்சோவா காவல்துறையினரின் தகவலின்படி, கடந்த 5-ம் தேதி இரவு 8.30 மணிக்கு குப்தாவின் அந்தேரி (மேற்கு) அலுவலகத்தில் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த புகார் 100 சதவீதம் பொய்யானது என்று மணீஷ் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், , "இது ஒரு தவறான குற்றச்சாட்டு... நூறு சதவீதம் தவறான குற்றச்சாட்டு. டிரைவருக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. அவர் காவல்துறையிடம் சென்று ஒரு தவறான புகாரை அளித்திருக்கிறர். எனது நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்தவே அவர் இப்படி செய்திருக்கிறார்.

எதோ ஒரு பிரச்சினையை கிளப்பி என்னிடம் இருந்து பணம் பறிக்க இப்படி அவர் செய்திருக்கிறார். அவர் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் சம்பளம் பெற்று வருகிறார். அதற்கு மேல், அவருக்கு முன்பணமும் கொடுத்துள்ளேன். நான் அவருக்கு பல முறை சம்பளத்தை விட முன்பணம் அதிகமாக கொடுத்துள்ளேன்.

என்னுடைய வங்கி அறிக்கையை நீங்கள் பார்க்கலாம். டிரைவர் பெயர், தொகை மற்றும் தேதி தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. போலீஸிடம் நான் எனது வாக்குமூலத்தையும், வங்கி அறிக்கையின் நகலையும் சமர்ப்பித்துள்ளேன்' என்றார்.

1 More update

Next Story