'பைசன்' படம் பார்த்து...கட்டியணைத்து அன்பை பரிமாறிய இயக்குனர் மாரி செல்வராஜ் - பா.ரஞ்சித்


Director Mari Selvaraj and Pa. Ranjith exchanged hugs after watching the movie Bison
x

'பைசன்' திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

சென்னை,

'பைசன்' திரைப்படம் நேற்று வெளியானநிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'பைசன்' படத்தை திரையில் பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித், கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

1 More update

Next Story