நடிகை திஷா பதானியின் தந்தைக்கு துப்பாக்கி உரிமம்

பிரபல இந்தி நடிகை திஷா பதானி.
லக்னோ,
பிரபல இந்தி நடிகை திஷா பதானி. இவர் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஜெகதீஷ் பதானி.
இதனிடையே, ஜெகதீஷ் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட துப்பாக்கி சூடு நடத்தியவர்களை என்கவுன்டர் மூலம் சுட்டுப்பிடித்தனர்.
அதேவேளை, நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் பதானி பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி மாவட்ட கோர்ட்டில் விண்ணப்பித்தார். இந்நிலையில், ஜெகதீஷ் பதானி துப்பாக்கி வைத்துக்கொள்ள மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story






