64 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த 27 வயது கதாநாயகி...எந்த படம் தெரியுமா?

சமீபத்தில், சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்ததற்காக டிரோல் செய்யப்பட்டார்.
சென்னை,
திரையுலகில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து அவ்வப்போது விவாதம் நடக்கிறது. சமீபத்தில், சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்ததற்காக டிரோல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு 27 வயது ஹீரோயின் 64 வயது ஸ்டார் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?.
அந்த நடிகர், நடிகை யார் தெரியுமா?. ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சோனாக்சி சின்காதான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் லிங்கா. இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் 2014 -ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ரஜினிகாந்த் இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சோனாக்சி சின்கா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படத்தின் போது ரஜினிக்கு 64 வயது, சோனாக்சிக்கு 27 வயதுதான்.
ரஜினிகாந்திற்கு தற்போது 74 வயது. அவர் கடைசியாக கூலி படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமீர் கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. மறுபுறம், ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். நெல்சன் இந்தப் படத்தை இயக்குகிறார்.







