விஜய்யை சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் “கலக்குறீங்க சகோதரா..” என்று தனக்கு வாழ்த்து தெரிவித்ததை இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிராகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் நேற்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் "விஜய்யை நான் சந்தித்த போது, 'கலக்குறீங்க சகோதரா' என அவர் சொன்னபோது நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள்! விஜய்யின் இந்த வார்த்தைகளுக்கு நன்றி! அவருடைய 'சச்சின்' படத்தின் ரீ-ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.






