100வது நாள் வெற்றியில் 'டிராகன்' திரைப்படம்

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெற்றிகரமாக 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
100வது நாள் வெற்றியில் 'டிராகன்' திரைப்படம்
Published on

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். கடந்த பிப்ரவரி 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகிய இருவரும் நடித்தனர்.

இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பியது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கேடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டிராகன்' வெளியான போதிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com