இந்தியிலும் வசூலை குவிக்க தயாரான 'டிராகன்'


Dragon ready to collect collections in Hindi
x
தினத்தந்தி 9 March 2025 11:28 AM IST (Updated: 9 March 2025 5:15 PM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' திரைப்படம் இந்தியில் வெளியாகவுள்ளது

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் நடித்துள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் வசூலை குவிக்க 'டிராகன்' தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 14-ம் தேதி இந்தியில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story