‘போதைப்பொருள் எதிர்காலத்தை அழிக்கும்’ - நடிகை ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா, இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார்.
சென்னை,
ஆந்திராவில் புதிதாக நிறுவப்பட்ட ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ரீலீலா கலந்து கொண்டார். அங்கு அவரை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் கூறிய கருத்து அனைவரின் பாராட்டுகளை பெற்றது.
ஸ்ரீலீலா இளைஞர்களுக்கு, போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘போதைப்பொருள் எதிர்காலத்தை அழிக்கும். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஒழுக்கம், விளையாட்டு மற்றும் கலைகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது’ என்றார். ஸ்ரீலீலாவின் இந்த வார்த்தைகளுக்கு அங்கிருந்தவர்களிடம் இருந்து கைதட்டல் கிடைத்தது.






