பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மராட்டியம், கேரளாவில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் டினா மவுரியா. இவர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
இதனிடையே, மராட்டியத்தில் மைதி ஆற்றை தூய்மை படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 65 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக அம்மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நடிகர் டினா மவுரியாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், மராட்டிய பொருளாதார குற்றப்பிரிவு அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் டினா மவுரியாவின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மவுரியாவின் வீடு உள்பட மராட்டியம், கேரளாவில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






