"எம்புரான்" கதாபாத்திர அறிமுக போஸ்டர் அப்டேட்

"எம்புரான்" கதாபாத்திர அறிமுக போஸ்டர் அப்டேட்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Published on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாலமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் படக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது. 18 நாட்களில் 36 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் எம்புரான்' படம் மார்ச் 27ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com