பகத் பாசிலின் "ஓடும் குதிரை சாடும் குதிரை" பட டிரெய்லர் ரிலீஸ்!

அல்தாப் சலீம் இயக்கிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
தற்போது இவர் மலையாளத்தில் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். அல்தாப் சலீம் இயக்கிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இளம் நடிகை ரேவதி பிள்ளை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆஷிக் உஸ்மான் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இப்படம் வருகிற 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






