'ஹரி ஹர வீரமல்லு' ரிலீஸ் எப்போது? - தொடரும் வதந்தி....ரசிகர்கள் குழப்பம்


Fans await clarity as Pawan Kalyan’s HHVM release date rumours continue
x

இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தற்போது இவர் 'ஹரி ஹர வீரமல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார்.

நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக கடந்த மாதம் 28-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அப்போது வெளியாகாத இப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போதும் வெளியாகவில்லை. இதனைத்தொடர்ந்து, இப்படம் ஜூன் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் இணையத்தில் வதந்தி பரவின. ஆனால் இப்போது, ஜூன் 13-ம் தேதி என்று மற்றொரு வதந்தி பரவி இருக்கிறது. தொடர்ந்து ரிலீஸ் தேதி குறித்த வதந்திகள் பரவி வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

1 More update

Next Story