தென்னிந்திய திரைப்படத்துறை குறித்த பேச்சு வைரல் - ''தங்கல்'' பட நடிகை விளக்கம்


Fatima Sana Shaikh says her comment about casting couch in South films was blown up
x
தினத்தந்தி 15 Jun 2025 6:15 PM IST (Updated: 15 Jun 2025 6:19 PM IST)
t-max-icont-min-icon

காஸ்டிங் கவுச் குறித்த தனது கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளதாக ''தங்கல்'' பட நடிகை பாத்திமா சனா ஷேக் கூறியுள்ளார்.

சென்னை,

தென்னிந்தியத் திரைப்படத் துறைகளில் காஸ்டிங் கவுச் குறித்த தனது கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளதாக ''தங்கல்'' பட நடிகை பாத்திமா சனா ஷேக் கூறியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றிப் பேசியதாகவும், ஆனால் முழு தென்னிந்தியத் திரைப்படத் துறையும் அப்படி இல்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஸ்டிங் கவுச் குறித்த எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அது ஒரு குறிப்பிட்ட சம்பவம் மட்டுமே. ஆனால் முழு தென்னிந்தியத் திரைப்படத் துறையும் அப்படி இல்லை.

ஒவ்வொரு பெண்ணும் இதை கடந்து வந்திருப்பார்கள். இது எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் உள்ளது. என் வார்த்தைகள் ஏன் பெரிதாக்கப்பட்டன என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.

1 More update

Next Story