'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' பட டிரெய்லர் - வைரல்


Final Destination Bloodlines movie trailer Out Now
x
தினத்தந்தி 26 March 2025 12:29 PM IST (Updated: 26 March 2025 5:55 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். இதன் முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட், மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, இதுவரை இதன் 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' என்ற 6-வது பாகம் உருவாகி உள்ளது. இதில் மறைந்த நடிகர் டோனி டோட், பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

1 More update

Next Story