“பிராமிஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன்


“பிராமிஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன்
x

இந்த உலகில் சத்தியம் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதை ‘பிராமிஸ்’ படத்தில் பேசி உள்ளதாக இயக்குனர் அருண்குமார் சேகரன் கூறியுள்ளார்.

கதையின் நாயகனாக நடித்து ‘பிராமிஸ்’ திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் பணியாற்றி உள்ளார். சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.

கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தில் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ‘பிராமிஸ்’.

இயக்குநர் அருண்குமார் “இந்த உலகில் பிராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் பிராமிஸ் மிக மதிப்புள்ளது.உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி பிராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம். ஒரு கட்டத்தில் அந்த பிராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை” என்கிறார்.

இந்த நிலையில் ‘பிராமிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

1 More update

Next Story