'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த சந்தானம்


First Single from DDNextLevel on 26 Feb 2025
x

பிரேம் இயக்கிவரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே மாதம் வெளியாக உள்ளது.

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த பாடல் வருகிற 26-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story