"இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக.."- விரைவில் திரைக்கு வரும் 'அனலி'

தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் பற்றிய சிந்தனையில் ஒரு புதிய கதை தயாராகி இருக்கிறது. சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ‘அனலி' என்று பெயரிட்டுள்ளனர்.
தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்துள்ள இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்' போஸ்டரை டைரக்டர்கள் வெங்கட்பிரபு, கணேஷ் கே.பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
தினேஷ் தீனா கூறும்போது, ‘‘இது ஒரே இரவில் நடக்கும் கதை. மூன்றாம் உலகப்போரையும், மிகப்பெரிய கடத்தல் மன்னன்களாக திகழ்ந்தோரை பற்றியும் படத்தில் சொல்லியுள்ளோம். இதில் சிந்தியா லூர்டேவின் நடிப்பு பேசப்படும். பெரிய ஆக்ஷன் கதாநாயகியாக அவர் வருவார்.
இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கன்டெய்னர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது" என்றார். 'அனலி' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி வெளியாக உள்ளது.






