பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் 4 படங்கள்..!

கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது.
சென்னை,
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 'பராசக்தி' படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அடுத்தடுத்து அறிவித்துள்ளது.
தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு புதுப்படங்கள் போட்டிபோட்டு வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன.
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜனவரி 14-ம் தேதியும், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’, மோகன் ஜியின் ‘திரௌபதி 2’, விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஆகியவை ஜனவரி 15-ம் தேதியும் வெளியாகவுள்ளன.






