கீதா கைலாசத்தின் “அங்கம்மாள்” பட டிரெய்லர் வெளியீடு

அங்கம்மாள் திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
கீதா கைலாசத்தின் “அங்கம்மாள்” பட டிரெய்லர் வெளியீடு
Published on

ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் அங்கம்மாள். இப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது. இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படம் வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடைப்பெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தமிழ் திரைப்படமான அங்கம்மாள் படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com