9 நாட்களில் இத்தனை கோடி? குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம்

அஜித்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'.
சென்னை
அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், வசூல் ரீதியிலும் இந்த படம் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், 9 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






