பட்ஜெட் ரூ.50 லட்சம்...வசூல் ரூ.100 கோடி?...பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த படம்

வெறும் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் நுழைய உள்ளது.
சென்னை,
சமீப காலமாக, சிறிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் அதிசயங்களை உருவாக்கி வருகின்றன. இதுபோன்ற வெற்றிகளை பொதுவாக தென்னிந்திய படங்கள் பெற்றுவரும்நிலையில், தற்போது, ஒரு வட இந்திய படம் இந்த வெற்றியை பெற்றுள்ளது.
வெறும் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.78 கோடி வசூலித்திருக்கிறது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் எது தெரியுமா?, ’லால் கிருஷ்ண சத சஹாயதா’தான்.
தற்போது நாடு முழுவதும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குஜராத்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த இந்த சிறிய படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது.
Related Tags :
Next Story






