பரியாவின் ''குர்ராம் பாபி ரெட்டி'' - டிரெய்லர் வெளியீடு

இத்திரைப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பரியா அப்துல்லா, கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ''ஜாதி ரத்னலு'' படத்தின் மூலம் அறிமுகமானார்.
குறுகிய காலத்தில், அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ராவணசுரா மற்றும் லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
பரியா அப்துல்லா கடைசியாக பச்சல மல்லியில் நடித்திருந்தார். தற்போது அவர், ''குர்ராம் பாபி ரெட்டி'' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முரளி மனோகர் ரெட்டி எழுதி இயக்கி இருக்கிறார்.
இத்திரைப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் யோகி பாபு, பிரம்மானந்தம், ராஜ் காசிரெட்டி, வம்ஷிதர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story






