“திருவாசகம்” ஆல்பத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்


“திருவாசகம்” ஆல்பத்தின் முதல் பாடலை  வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்
x
தினத்தந்தி 20 Jan 2026 6:19 PM IST (Updated: 20 Jan 2026 6:28 PM IST)
t-max-icont-min-icon

திருவாசகத்தின் முதல் பாடல் வரும் 22ம் தேதி ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட உள்ளார்.

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். திருவாசகம் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பொங்கல் விழாவில் தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சி தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

1 More update

Related Tags :
Next Story