ஜி.வி.பிரகாஷின் "இடி முழக்கம்" 2-வது பாடல் வெளியானது


தினத்தந்தி 12 April 2025 6:54 PM IST (Updated: 15 April 2025 7:49 AM IST)
t-max-icont-min-icon

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தின் 2-வது பாடலை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

சென்னை,

'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கதில் சமீபத்தில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இப்படம் திரையரங்கை விட ஓ.டி.டி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்திற்கு 'இடி முழக்கம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாக உள்ளது.


இந்நிலையில் படத்தின் "கானா விளக்கு மயிலே" பாடலை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

1 More update

Next Story